நான்

காதல் பூ பறிக்க சென்று
உன் இதய முள்
பறித்தவள்..!! நான்

உன்னை துரத்திவர தெம்பு
இல்லை எனக்கு..!!
என்னை நிறுத்தி கேட்க அன்பு
இல்லை உனக்கு.!..

நான் தோற்று வீழ்ந்தவள்
உன்னை
தேற்ற நினைப்பவளும்
நான்..!!

அழுகின்ற பொழுதெல்லாம்
ஆறுதல் வேண்டாம்
அழவிடாத தேறுதல்
தா..

என் இதயம் உடைத்தாய்..
உன் இதயம் அடைத்தாய்..
... எதற்காக என்ற
கேள்வியே.. எனக்கு
பதிலாகி போனது
ஏன்..?

எழுதியவர் : இவள் நிலா (10-Jan-16, 9:04 pm)
Tanglish : naan
பார்வை : 125

மேலே