காதல் காதல் காதல் - உதயா

காதல்

அதுவொரு உணர்தல்
அதுவொரு புரிதல்

அதுதான் அமுது
அதுவேதான் நஞ்சு

அதுவுனை மாற்றும்
மேதையாகவும்
பேதையாகவும்

காதலுக்கு
சாதி ஒன்று
மதம் ஒன்று
இனம் ஒன்று
மொழி ஒன்று
நிறம் ஒன்று
உயிர் ஒன்று
துடிப்பு ஒன்று
இதயம் ஒன்று

நீ காதலை கண்டெடுத்தால்
காதல் உன்னில் கவிதையை கண்டெடுக்கு

காதல் மௌன
மொழிகளின்
அகராதி

காதல்
இன்புருத்துவதுமில்லை
துன்புருத்துவதுமில்லை

காதல்
ஒரு தனி சுகம்
சொன்னால் புரியாது
புரிந்து கொண்டவனுக்கும்
சொல்ல தெரியாது

காதல்
சொர்க்கத்தின் பிறப்பிடமும் அல்ல
நரகத்தின் வாழ்விடமும் அல்ல

அது
கண்ணுக்கு தெரியாத
காற்றினை போன்றது

காதல்
இல்லையென்பாரிடமும் இருக்கும்
இருக்குமென்பாரிடமும் இருக்கு

காதல்
ஒரு தாகம்
பருகினாலும் தணியாது
அதிலே மூழ்கினாலும் தெளியாது

அது மனதில் சிறகு கட்டி
இதயத்தில் ஊஞ்சல் பூட்டும் கலை

இமை திறப்பில்
நித்திரை நுழைத்தும்
இமை அணைப்பில்
நித்திரை கலைக்கும் இ(ம்)சை

குருதி ஓடையில்
ஓடிக்கொண்டே
கண்ணீர் கடலில்
மிதந்து வரும்
கானல்

நீர் திவளைக்குள்
ஒளிந்திருக்கும் கனல்
எரிமலைகளுக்குள்
உறைந்து கிடக்கும் பனி

பித்த நிலையின்
மொத்த சுகத்தையும்
நித்தமும் அளிக்க
வல்லமை படைத்த வரம்

வெண்மேக மேற்பரப்பில்
வசிப்பிடம் தேடி
நிலவொளி வெளிச்சத்தில்
நினைவு பெட்டகத்தை திறந்து
மிதக்க வைக்கும் போதை

பூக்களை முட்களோடும்
கோர்த்து தனக்குள்ளே
விற்று தீர்க்கும் பூக்காரி

காதலை
பாடுவதென்றால்

வார்த்தைகள்
வண்ணங்களோடு
நீண்டு கிடக்கும்

காகிதங்கள்
எரிந்து எரிந்து
மீண்டும் பிறக்கும்

தூரிகையின் குருதி
தீர்ந்து போனாலும்
காதலின் குருதி
அதில் நிரம்பி வழியும்

காதல் ஒரு மாயை என்றால்
மாயையும் காதலாகிவிடும்

காதல்
பிறப்பதில்லை
மலர்வதில்லை
உதிர்வதில்லை

காதல்
எங்கும்
வருவதும் இல்லை
போவதும் இல்லை

- உதயா

எழுதியவர் : உதயா (11-Jan-16, 3:12 pm)
பார்வை : 318

மேலே