தை மகளே வா | Thai Magale Vaa

தை மகள்
தமிழ் சுமந்து
தென்றல் ஆனாள்.

சூரியனை வரவேற்க
புன்னகை பானையெல்லாம் நிரப்பி
அன்பு வணக்கம் என்றாள்.

வீடு நலம் பெற
நாடு நலம் பெற
நல்ல சேதி தர வந்தாள்.

சொற்கள் வணங்கி நிற்க.
சொர்க்கம் தமிழுக் கென்றாள் .
வார்த்தைகளில் வெல்லம்கலந்து
வாழ்த்துக்கள் வழங்க வந்தாள்.

இனிய பொங்கல்
இனி இனிப்பாக்கும் வாழ் நாளை.என்றாள்.
அழுத விழிகள்
இனிசிரிக்கட்டும் அழகாக என்றாள்.

எழுதியவர் : அன்புடன் தமிழ் மகள்- மணிமே (11-Jan-16, 3:53 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 3908

மேலே