வலிமையே உந்தன் பெயர் பெண்ணோ

ஈரேழ் வயதில் பெண்மை எய்தி
இருபத்திநான்கில் தாய்மை அடைந்து அடிக்கும்
கரங்களுக்கும் அணைக்கும் மனங்களுக்கும் மத்தியில்
வைரமாய் ஒளிவீச பொறுமை காக்கும் பெண்மையே !!
உந்தன் பெயர் தான் என்னவோ ???
பாரதி கனவு கண்ட பெண்ணினம்
பார் காணும் நாள் வரும்.....
நேரம் எதுவென்று தேடியே நீ
செய்த தவத்திற்கு பெயர் என்னவோ ???
பாத்திரம் தேய்க்கும் கரங்களுக்கும்
பத்திரம் உண்டென்று எழுதினான் சட்டம்
பகுத்தறிவும் தேவையென்று நாடியது ...
பட்டம் பெற படிப்பை தேடியது....
விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் பயின்று வரலாறு படைத்து
வியக்க வைக்கும் சாதனை பல புரிந்து
மலைக்க வைத்தாய் பெண்ணே !!!
உனக்கு பெயர் பல தேடினேன் .... கண்டேன் ....!!!
வலிமைக்கும் மறுபெயர் நீ தானோ ???
என் கவிக்கும் உயிர் கொடுக்கும் உந்தன் திடம்தானோ !!!!

எழுதியவர் : UDAYANILA (11-Jan-16, 8:19 pm)
பார்வை : 601

மேலே