சுமதி அமைதி

உன்னோட பொண்ணு பேரு என்னடா?

எம் பொண்ணு பேரு சுமதி.

சரி அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

தற்காலத் தமிழர் பண்பாட்டிற்கு இணங்க அர்த்தம் தெரியாமலே இந்தப் பேர வச்சுட்டோம். எம் பொண்ணுக்குப் பேரு வைக்கறதுக்கு முன்னாடி சோதிடர் ஆலோசனையைக் கேட்டோம். அவுரு தான் எம் பொண்ணுக்கு ‘சு’ முதல் எழுத்தா இருக்கற பேரா வைக்கச் சொன்னாரு.

ஏண்டா நண்பா, நீ தமிழாசிரியரா இருக்கற. உம் பொண்ணுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரா வச்சிருக்கலாமே.

டேய் நா பொழைக்கறதுக்கு தமிழாசிரியர் வேலை. மொழிப் பற்று எனக்கு இருக்கவேண்டுங்கற அவசியம் இல்லடா. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள தமிழாசிரியர்கள்தாண்டா அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கறாங்க.

போடா. தாய் மொழிலெ பேரு வைக்கறது தாண்டா தமிழனுக்குப் பெருமை, அடையாளம். என்ன செய்யறது தமிழாசிரியரா இருக்கற நீ கூட சினிமா தாக்கத்துக்கு ஆளாகியிருக்கற. உம். என்னத்த சொல்ல. நா இந்தி ஆசிரியரா இருந்தாக் கூட அழகான தமிழ்ப் பேருங்களத் தான் என்னோட ரண்டு பிள்ளைங்களுக்கும் வச்சிருக்கேன். நம்ம ஒடம்பில தமிழ் ரத்தம் ஓடறதா எப்படிடா மறக்க முடியும். உம் பொண்ணுப் பேரு சுமதி. எம் பொண்ணுப் பேரு அமைதி. டேய், அமைதி-ன்னு பேரு வச்சாக் கேவலம்ன்னு நா நெனைக்கிலடா.
=======


SUMATI
GENDER: Feminine
: सुमती (Hindi, Sanskrit)
Meaning & History
Means "wise, good mind", derived from Sanskrit सु (su) "good" and मति (mati) "mind, thought". In the Hindu epic the 'Mahabharata' this is the name of King Sagara's second wife, who bore him sixty thousand children.
நன்றி: behindthenamecom
சுமதி: நல்ல உள்ளம், சிந்தனை, எண்ணம். அறிவுக் கூர்மையான
---------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (11-Jan-16, 8:54 pm)
பார்வை : 218

மேலே