அசீத்து அசீத்து எங்கடா போயிட்ட

அசீத்து எங்கடா போயிட்ட. குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டுவாடா.

இந்தாங்க தாத்தா. எம் பேரு அஜீத். நீங்க என்ன அசீத்து-ன்னு கூப்படறது கொஞ்சங்கூட நல்ல இல்லீங்க தாத்தா.

நா என்னடா கண்ணு செய்யட்டும். உங்கப்பன் உனக்கு வச்சிருக்கிற பேர என்னால சரியாச் சொல்ல முடியல. நான் கிராமத்துக்காரன். நாம பேசற மொழிலெ பேரு வச்சிருந்தாத்தாண்டா என்னோட வாயிலெ நொழையும். சரி அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்.

தாத்தா எனக்கு அதெல்லாம் தெரியாது தாத்தா. என்னோட அப்பா, அதாவது உங்க மகன் நடிகர் அஜீத் குமாரோட தீவிர ரசிகர். அதனால எனக்கு அந்தப் பேர வச்சராம். அவுருக்கும் அந்தப் பேருக்கு அர்த்தம் தெரியாதாம். நீங்க ஏந் தாத்தா எம் பேருக்கான அர்த்தம் பத்தியெல்லாம் கவலப்படறீங்க?

இல்லடா. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டென்.

-----------------------------------------------------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
அஜீத் என்ற வடமொழிப் பெயருக்கு: ’வெல்ல முடியாத’ என்று பொருள்:
=================================================================
நன்றி: விக்கிப்பீடீயா:
The name is derived from Sanskrit, where its primary meaning is "invincible", "irresistible", "unsurpassed". The literal meaning is "unconquered", from the prefix a- "not", and jita "conquered".

எழுதியவர் : மலர் (11-Jan-16, 10:21 pm)
பார்வை : 144

மேலே