நகி நகி நகி நகி

யாரைய்யா நகி , நகி -ன்னு கூப்பிட்ட?

எம் பையனத்தாங் கூப்பிட்டேனுங்க.

உம் பையம் பேரு நகி -யா?

ஆமாங்கய்யா?

எதுகய்யா அந்தப் பேர உம் பையனுக்கு வச்ச.

இல்லீங்கய்யா எம் பையனுக்கு எங்க குலதெய்வம் காத்தவராயன் சாமி பேர வைக்கலாமுனு இருநுதேனுங்க. எங்க எதிர் வீட்டுக்காரரு தா "பையனுக்குத் தமிழ்ப் பேர வைக்காதே. எதிர் காலத்திலே அவம் பேரை எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. அதனால அவனுக்கு ஒரு இந்திப் பேரா வச்சிரு"ன்னு சொன்னாருங்க. அதுக்கப்பறமா நா கடைக்கப் போனேனுங்க. என்ன கடந்து போன ரண்டு வட நாட்டு பசங்க "நகி நகி நகி" ராகமாப் பாடிட்டுப் போனாங்கய்யா. சரி அது நல்ல இசையோட கூடிய இந்திப் பேருன்னு எம் பையனுக்கு நகி - ன்னு பேரு வச்சுட்டேனுங்க அய்யா.

யோவ் அது நகி இல்லய்யா. நஹீ. அதுக்கு இல்லைன்னு அர்த்தமய்யா.

அதுக்கு என்ன அர்த்தமா இருந்தா என்னங்கய்யா. நகி-ங்கறது இந்தி வார்த்தையா இருக்குதே அது போதுமுங்க.

எழுதியவர் : மலர் (11-Jan-16, 11:34 pm)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே