பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்....
-----------------------------------------
தை மாதம் பிறந்ததென வருகுது பொங்கல்..
தத்தித் தோம் என் ஆடி மகிழ வருகுது இந்தப் பொங்கல்..

துன்பமெல்லாம் பறந்தோட வைக்கும் இந்தப் பொங்கல்
துண்டு துண்டாய் கரும்பு வெட்ட குறை தீர்க்கும் பொங்கல்

சத்தமில்லலா புன்சிரிப்பை வரவழைக்கும் பொங்கல்
சர்க்கரையாய் திகட்ட வைக்க பொங்குது இந்தப் பொங்கல்...

அருவடையாம் பொங்கி பெருக வந்தது புதுப் பொங்கல்
அருமையாய் கூடி வாழ கற்றது இந்தப் பொங்கல்...

ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (12-Jan-16, 11:20 am)
Tanglish : pongalo pongal
பார்வை : 70

மேலே