ஹைக்கூ

தகைமை இல்லாமலேயே
தரணியை வாங்கலாம்
அரசியல்

பசியும் பட்டினியும்
துடுப்பெடுத்து ஆடும்
ஆடுகளம் ஏழை

உதிரம் கொட்டி
உயிரை பூக்கும்
விஞ்ஞானி தாய்

வியர்வை குளத்தில்
நாளையும் விடியல்
தந்தை

தொண்டை குழிக்குள்
உயிர்
கூட்டணி அரசு

சீதனச் சுமை தாங்காமல்
வானம் அழுகிறது
மழை

வானப்பெண்
வயதுக்கு வந்துவிட்டாள்
அந்திப்பொழுது

நாளையும் விடியும்
கிழக்கில் சூரியன்
நமது தலைவர்


பாலமுனை UL அலி அஷ்ரப்

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் (12-Jan-16, 1:08 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
Tanglish : haikkoo
பார்வை : 93

மேலே