நானும் அமைதியாக
அடிமனதும் ஆக்கிரமிப்பில்
ஆறரிவும் செயலிழந்து ஐக்கியமானது
அவள் அன்பில்
ஆர்ப்பரித்து ஆடிய நானும்
அமைதியானேன் அவள்
ஆழ்கடல் மனதில்..
இன்மொழி பேசி
ஈகையாய் அளித்தால்
இவ்வுயிருக்கு அன்பை
ஈன்ற தாயாய்...
உயிரைப் பிழிந்து
ஊனில் ஊற்றி அவள்
உடைமையாக்கவே நான்
ஊறிப்போனேன் அவளுள்ளே...
எப்போழ்தோ எனக்குள்ளும்
ஏகபோகமாய் விளைந்து விட்டாள்
என்றும் இல்லை அறுவடை
ஏமாற்றமும் எனக்கில்லை...
ஐயமில்லை எனக்கும்
ஒற்றை நொடி பிரிவும்
ஓராயிரம் முறை கொல்லும்
ஒரு நுதல் அசைவும்
ஓசை நூறு உரைக்கும்...
ஔவியம் கொண்டோம் அன்பு அளிப்பதிலே...