வசமாவது எப்போது

வசமாவது எப்போது

முகில் சுமந்த
நீர்த் துளிகள்
மழையானது!

மார்கழியிலோ
அவை
பனித் துளிகளானது!

பனித் துளிகள்
சுமந்த
மலர்களோ
வாசமானது!

வாசமான
மலர்களோ
மங்கையர்
வசமானது!

மலர்கள்
வசமான
மங்கையோ
என் இனிய
காதலியாய்
வசமாவது
எப்போது ?

---- கே. அசோகன்

எழுதியவர் : கே.அசோகன் (12-Jan-16, 8:33 pm)
பார்வை : 76

மேலே