பனி போன்ற பெண் நிலவு
பனி போன்ற பெண் நிலவு !!!
மிதமான காற்று பனி மூடும் காலம்,
மிதந்தேன் மெல்லிசை கேட்டு,
குழந்தைகளின் சிரிப்பொலியும்,
கொஞ்சும் கொலுசொலியும் காதில் கேட்க,
கொண்டேன் ஆவல் அதன் முகம் காண,
நடந்தேன் காட்டு வழி பாதையில் சேர்ந்தேன் நீர்விழ்ச்சியில்,
நீர்விழ்சியின் சாரல் என்னை நனைக்க - குளிர்
நடுக்கத்துடன் திரும்பி பார்த்தேன்,
சுற்றி எங்கிலும் வெண்மையான மலர் கோலம்,
சுகம் தரும் மெல்லிசையாய் நீர்விழ்ச்சி ஜதி பாட,
சுடர் ஒளியாய் காணும் இடம் எங்கும் புறாக்கள்,
சிரிப்போடு கை பிடித்து அழைத்தனர் சிறுவர்கள்,
புரியாத மகிழ்ச்சியோடு பின் சென்றேன்,
பாதம் பதியும் இடமும் மலர்ந்தெழும்ப
பார்த்தேன் ஒரு பெண் மலரை,
வெண்ணிற ஊசலில் வெண்புற போன்ற பெண் ஆட,
வார்த்தை அற்று வியந்தேன் !
வண்ண நிலா சிரிக்கும் என்பர் கண்டேன் அதை உண்மையில்,
வாய் பேசும் அவள் அழகில் மொட்டுக்களும் பூ பூத்து
வனம் எங்கும் வாசம் பரவி திருமண மகிழ்ச்சி அடைந்தேன் !!!!