காதலுக்கு காலம் இல்லை

காலம்சில கடந்து சென்றதினால் என் காதலும் கடந்ததென நினைத்தாயோ !
ஆற்றில்பல வெள்ளம் வந்ததினால் ஆற்றுமீனும் அழிந்ததென துடித்தாயோ !
கருமேகம் கதிரவனை மறைத்திடலாம் ஆனால் கரைத்திட முடியாது !
பலஎண்ணம் உன்னினைவை நிறுத்திடலாம் ஆனால் அழிதிடமுடியது !
கடலே உறைந்துபோனாலும் ! மலைகள் கரைந்துபோனாலும் !
காற்றின் ஓட்டம் நின்றாலும் ! வெப்பம் இல்லை என்றாலும் !
நான் இறக்கும் ஒரு நொடி முன்னாலும் !
கலக்கமின்றி நீ கேட்டால் !
தயக்கமின்றி நான் சொல்வேன் !
நீ தான் என் காதலியென்று....

எழுதியவர் : (13-Jan-16, 5:03 pm)
பார்வை : 105

மேலே