வெங்காயக் கண்ணீர்2

வெங்காயக் கண்ணீர்….2
*******************************


உதட்டுச்சாயமற்ற உன் முத்தத்திலும்
என் கன்னம் சிவக்கிறது.
*****

என் பதற்றத்தை,
உன் கால் கொலுசுகளுக்கு
எப்படிப் புரியவைப்பது?
*****

கண்ணீர்,
கன்னம் புறண்டு ஓடுகிறது.
நான் மூழ்கிடும் மட்டும்.
*****

உன் உதடுகளில் பட்டபின்
பற்களில் துண்டாக
எந்த விரல் நகங்களுக்கும் சம்மதமே.
*****

கண்ணீரை ஈா்த்துக் கொள்ளும்
தலையணை கிடைத்து
என் பாக்கியமே.
*****


…….ஆண்டன் பெனி.

எழுதியவர் : ஆண்டன் பெனி (14-Jan-16, 8:08 am)
பார்வை : 43

மேலே