தப்புக் கணக்கு
பெற்றோர் நினைப்பது போல்
பிள்ளைகள் வளர்ந்து விட்டால்
படித்து விட்டால் மகிழ்ச்சிதான்
ஆனால் அவர்களின் பிற்கால வாழ்வும்
உங்கள் கையில் என்பதை மறவாதீர்கள்
அவரவர் வாழ்க்கையை
அவரவர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை
அவர்களிடம் விட்டு விடாதீர்கள்
பெற்றோர்களில் சிலர் பிள்ளைகள் வாழ்வை
பிள்ளைகளிடமே தட்டிக் கழித்து விடுகிறார்கள்
அது தப்பு அந்தப் பிஞ்சு வயதில்
அவர்கள் செய்வது அவர்கள் தேர்ந்தெடுப்பது
சரியாகுமா / கேள்விக் குறியே/
காதலித்து திருமணம் செய்து கொள்வது வேறு
நாமாக அந்த நிலைக்கு அவர்களைத்
தள்ளி விடுவது முறையல்ல,
எல்லோரும் அப்படி அல்ல ஒரு சில பெற்றோர்
பிள்ளைகளை வளர்த்துப் படிப்பித்து விட்டால்
தங்கள் பெற்ற கடமை முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்
அதுவே தப்பான கணக்கு
உங்கள் உயிர் உள்ளவரை அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்
அவர்களை அணைத்து வாழுங்கள்
அவர்கள் தேவைகளை நீங்களே முன்னின்று
தீர்மானித்து செய்து வையுங்கள் ,
மற்றவர்கள் முன்னிலையில் அவர்களும்
நல்ல பொறுப்பு உள்ள பிள்ளைகளாய்
வாழ வழி அமைத்திடுங்கள்
நாளைய சமுதாயம் உங்கள் கைகளிலே
நலமுடன் நாட்டினையும் பேணிக் காத்திடுங்கள்