தைப் பொங்கல்
அன்பை பெருக்கி
ஆற்றலை தந்து
இன்னல்களை நீக்கி
ஈகை குணம் தந்து
உயர்ந்த இடத்தைப் பெற்று -மன
ஊனங்களை தவிர்த்து
எழிலான புன்னகை காட்டி
ஏற்றமிகு வாழ்வுதந்து
ஐயம் தவிர்த்து
ஒற்றுமைதனை நிலைநாட்டி
ஓங்கு புகழ் தந்து
ஔவியம் பேசாமல்
இனிய தைமகளாம்
பொங்கல் பாவையே
எம்மை வாழ வைப்பாய்...!!!!!