பேரானந்தராய் வாழ்க நீ

நண்பா, நண்பா
கோடீஸ்வரனாக
கொள்ளை ஆசை எனக்கு
எளிய வழி அதற்கிருந்தால்
சொல்லடா உயிர் நண்பா.

எத்தனையோ வழிகள்
எளிதான வழிகள்
அவற்றில் நானறிந்த ஒனறு
போலிச் சாமியார் வேடம்.

முதலில் திரட்டடா
போலிச் சீடர்களையும் சீடிகளையும்
கூலிக்குக் கிடைப்பார்
கொத்தடிமைகளாய்க் கிடப்பார்
குரல் கொடுத்தால் போதும்
ஓடோடி வருவார்.

வாரிக் கொடுக்க
குறுக்குவழிப் பணம் சேர்த்த
வள்ளல் பலர் இருப்பார்.
வெளிநாட்டு பக்தர்களும்
நாளடைவில் கிடைத்து விட்டால்

ஐந்தாறு ஆண்டுகளில்
ஆயிரம் கோடிக்கு நீ
அதிபதி ஆகலாம்
அற்புத வாழ்க்கை
உனதாகிப் போகும்

சத்தியமாய்ச் சொல்கிறேன்
ஏமாற்றிப் பிழைப்பவர்க்கே
எதிர் காலம் சிறப்பாகும்
வாழ்க வாழ்க நீ
வையகம் அறிந்த
சகத் குரு பேரானந்தராய்!

எழுதியவர் : மலர் (15-Jan-16, 7:26 pm)
பார்வை : 92

மேலே