பெருமை பேசுவதை விட எழுதுங்களேன் உண்மைகளை பகிர்வதில் இணையத்தில் தமிழர்களின் பங்கு அதிகம் கிடையாது

உலகம் எங்களை கண்டுகொள்ளவில்லை , எங்களை புறக்கணிக்கின்றனர் போன்ற பல கட்டுரைகளை தமிழர்கள் பலர் இணையத்தில் எழுதுவதை பார்க்ககூடியதாக இருக்கின்றது ,

இன்று தமிழர் தொடர்பான முக்கிய பல விடயங்கள் கொஞ்சமாவது உலகறிய செய்தது வெளிநாட்டவர்கள்தான், தமிழர்களின் பங்கு அதிகம் கிடையாது, தமிழர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்துவதும் கிடையாது,

உதாரணத்துக்கு 2007 ஆம் ஆண்டு உலக அதிய தெரிவு பட்டியலில் 77 அதிசயங்களில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 அதியங்கள் இடம்பெற்றன, அவை மதுரை மீனாட்சியம்மன் கோயில் , தஞ்சைப் பெருவுடையார் கோயில்,அண்ணாமலையார் கோயில்,மாமல்லபுரம், இந்த 77 பட்டியலில் 7 அதிசயங்களை மக்கள் வாக்களிப்பில்தான் தெரிவுசெய்தனர்.
ஒவ்வொரு இனங்களும் தங்கள் பெருமையை உலகறிய செய்ய கடுமையாக பிரச்சாரம்செய்தனர்,

தாஜ்மஹாலுக்கு வாக்களிக்க சொல்லி வட இந்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தது , பல அமைப்புக்கள் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்தது, பாடசாலைகளுக்கூடாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டது, தனி நபர்கள் இணையத்தின் ஊடாக பிரச்சாரம் செய்தனர் , இளைஞர்கள் வரும் உல்லாச பயணிகளிடம் பிரச்சாரம் செய்தனர், ஆனால் தமிழர் தரப்பில் பலர் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை, நான் தஞ்சை பெருங்கோயிலுக்கு வாக்களித்துவிட்டு யாழ் இணையத்தின் ஊடாக என் நண்பர்களையும் வாக்களிக்க ஊக்கிவைத்தேன், ஏன் தமிழர்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை? இதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன்,

தமிழர்கள் தயவு செய்து இது தொடர்பாக கருத்து எழுதவும்.

எழுதியவர் : ஆதவன் ஹரி - முகநூலில் (17-Jan-16, 9:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே