அழகு படுத்துங்கள் - வேலு

வாகன புகை
அமில கழிவு
நச்சு புகை
கொஞ்சம் அழகு படுத்துங்கள்
வெப்பமயமாகிறது என் இல்லம்
இயற்கையே கொஞ்சம் செய்கை அழி
என் தேசம் பயணிக்க நீண்ட துரம் உள்ளது
கொஞ்சம் அழகு படுத்துங்கள்
என் தேசம் பயணிக்கும் பாதையை
உள்ளூர் சண்டை
உலக சண்டை
அழிகிறது தேசம்
கொஞ்சம் அழகு படுத்துங்கள்
அமைதி புறா எங்க போனது
காடுகள் கானலகிறது
தொலைந்து போகிறது பாலைவங்களுக்குள் என் தேசம்
கொஞ்சம் அழகு படுத்துங்கள்
அழிந்து போகும் முன்னே என் தேசத்தை