காதலால் கலைந்தான்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னதவம்
செய்தேன் என் மகனே
உன் தவம் நான் காண.
பள்ளி செல்ல அழமாட்டாய்,
பாடம் படிக்க அழமாட்டாய்,
வீட்டை விட்டு செல்லமாட்டாய்,
அம்மா அப்பா உலகம் என்பாய்,
இன்று...
அனைத்தும் களைந்து
கலை நயம் இழந்து
கண்ணீரோடு,
அலைவதேன் மகனே?
இடையில் வந்தவள்
இனித்து பேசியவள்
திணித்து சென்றது
என்ன?
தனித்து தவிக்கிறாயே
பிரிவில் துடிக்கிறாயே
உன்னை சுற்றி உள்ள உறவை பார்,
உனக்காக வாழும்
தாய்,தந்தை...
விழுதே
வீழ்ந்து விடாதே
எழுந்து நில்
தோல்வி என்பது,
வெற்றியின் விளிம்பில்
நீ தவற விட்ட முயற்சிதான்.