அர்த்தம் தேடல்

வாழ்கையின் சில நிமிடங்களில்
தன்னிலை மறந்து சிரிகின்றோம்
பலத் தருணங்களில்
பிறந்ததற்கு அர்த்தம் தேடி அலைகின்றோம்
மனதின் விருப்பங்களில்
வேண்டியதை அடைய துடிக்கின்றோம் !!!!
அருவியில் விழுந்த இலையில் எறும்பாக....
இவ்வுலகில் நம் இனிய வாழ்வு
முடிகின்ற இடம் அறியாமலும்
போகின்ற வழி தெரியாமலும்
எவ்வித பாதுகாப்பு இல்லாமலும்
உடன் துணை வர யாரும் இல்லாமலும்...
இம்மண்ணில் முளைத்ததன் அர்த்தம் தேடி
நீயும் செல் விரைந்து ஓடி
உன் செய்கைகளே உனது உயிர் நாடி!!!