இறைவனைத் தேடி ஓர் பயணம்

கடலுக்கடியில் குமிழிகளிலும்
ஆகாயம் பொழியும் தீர்த்தத்திலும்
ஆண்டவனே உன்னை தேடினேன்..
உண்மையில் நீ அங்கில்லை..
பசுமை போர்த்திய பால் நிலத்திலும்
வெறுமையான கானல்நீர் மணலிலும்
காலம் கடக்க உனைத்தேடினேன்..
கண்டதாய் யாரும் கூறவில்லை..
மலரினை தீண்டும் தென்றலிலும்
மாயவன் சுவாசிக்கும் பிராணத்திலும்
மறைவாய் தான் உனைத்தேடினேன்..
மணவாசத்தில் கூட நீயில்லை..
பதங்கமாகும் கற்பூரத்தீயிலும்
பதறி வெடிக்கும் எரிமலைக்குழம்பிலும்
ஏற்றங்களுக்கிடையே
எட்டிப்பார்த்தேன்..
லார்வாவுக்கிடையே
அந்த லட்சணம் இல்லை..
மேகம் தவழும் கீழ்வானிலும்
கோள்கள் அணிவகுக்கும் மேல்வானிலும்
காரணம் கூறாமல் கருத்தாய் பார்த்தேன்..
கடவுளே! நீ அங்குமில்லை..
அலைந்த அலுப்பில் களைத்துப்போனேன்..
இருட்டிய கண்கள் இமையைத்தேட
அங்கொரு திண்ணையில்
அட்டையாய் வீழ்ந்தேன்..
பக்கத்தில் ஓர் குரல்
பதட்டத்தில் என்னிடம்..
"தம்பி தண்ணீர் குடி"..
இமையைத் திறந்தேன்
திரை விலகியது..
எதிரில் இறைவன்
மனிதம் கொண்ட மனிதனாக..

எழுதியவர் : தீபாகுமரேசன் (20-Jan-16, 11:21 pm)
பார்வை : 326

மேலே