வகையுற கற்பரென்றும் ஈங்கே ----- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆயிரம் உறுப்பினரைக் கடந்தே
------ அன்பினால் கட்டுப்பட்டு நாளும்
சேயினைக் காக்கின்ற தாய்போல்
------- செவ்வனே வீறுநடை போடும்
தாயிடம் கவியருவி நின்று
------- தமிழ்தனைப் போதித்து மற்றும்
வாயினை மூடுகின்ற மக்கள்
------- வகையுற கற்பரென்றும் ஈங்கே !