செல்போன் கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி நம்ம ஊர் எப்டி இருந்துச்சு

வாங்க கொஞ்ச வருஷத்துக்கு பின்னாடி, போயிட்டு வருவோ:
அண்ணே, பத்து 1rupee காயின் குடுங்க.
அக்கா ரிவின்யூ ஸ்டாம்ப் இருக்கா.
மச்சா எப்போ போன் பண்ணாலும் அவ அப்பன்தாண்டா எடுக்குறான்.
அக்கா... அக்கா... ஒங்களுக்கு யாரோ கும்பகோணதுலருந்து போன் பண்ணிருகாங்க. அம்மா ஒங்கள சீக்கரம் கூட்டியாற சொன்னாங்க.
அண்ணே, அங்க போன் எடுக்கவே இல்ல, ஆனா காசு உள்ள விழுந்துடுச்சு ணே.
ஹே, ஏ ஆள் என்னோட பொறந்த நாளக்கி எனக்கு GREETING CARD அனுப்பிருந்தாரு டி.
இன்லான்ட் லெட்டர்: அன்புள்ள அப்பா அம்மாவிற்க்கு, நான் இங்கு நலம், நீங்க அங்க எப்டி இருக்கீங்க.
யோவ், ரிசிவர திருப்பி புடியா, தலகீழா புடிச்சிருக்க. அட ஆமா, அத்தா நாம பேசுனதே நமக்கு கேக்குதா.
சிடி கடை: அண்ணே, அந்த கேசட் இருக்கா.
சார் இந்த T-Series கேசட்ல எத்தன பாட்டு பதிய முடியும்.
மாப்ள நம்மூர் தேட்டர்ல ஷகிலா படம் போட்ருகாய்ங்கெ டா.
போஸ்ட்மேன் ஏ பேருக்கு எதாவ்து லெட்டர் வந்த்ர்க்கா.
5ரூபா FINE குடுங்க, எதுக்கு சார், ஒங்களுக்கு வந்த லெட்டர் ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பிருகாங்க.
ராமசாமி யாருங்க, நான்தாங்க, ஒங்களுக்கு தந்தி வந்த்ருக்கு, இந்த எடத்ல ஒரு கையெழுத்து போடுங்க.
பெரியவர்: தம்பி இந்த பேப்பர்ல இருக்க நம்பர கொஞ்ச போட்டுகுடு பா.
ஏன்டி கோமதி, எதுத்த வீட்டுக்கு புதுசா குடிவந்தாலே, அதான்டி அந்த பம்பாய்'காரி, கைல ஏதோ சோப்பு டப்பா மாதிரி வச்சுகிட்டு மினிக்கிட்டு திரிறா டி.
அண்ணே இந்த போன்ல அஞ்சா நம்பர் சரியா அமுங்க மாட்டிக்துணே, அட நல்லா அமுக்கு பா.
மாப்ள இந்த காலேஜ் அப்ளிகேஷன்'ல போன் நம்பர் எழுத சொல்லி போட்ருக்குடா, எவன்ட்டா நம்மூர்ல போன் வச்சுருகாய்ங்கெ.
இப்டிதாங்க CELLPHONE கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி இருந்துச்சு.
(நாளக்கி செல்போன் வந்ததுக்கு அப்றம் என்ன ஆச்சுனு சொல்ட்றே, பை பை)

எழுதியவர் : செல்வமணி (21-Jan-16, 10:42 pm)
பார்வை : 336

மேலே