கடை விரிக்கின்றன கட்சிகள், வாக்கு வாங்க

ஜாமீன் கேட்டு
எவனோ மீன் கடைக்கு
சென்றானாம், ஒருவன்.
கடைசி வரைக்கும்
கிடைக்கவில்லை,
கடல்லேயே இல்லையாம்,
என்று கதைத்தான்.

இத்தனை கோடி மக்களை
சலித்து பார்த்து ஏன்
இங்கு யாரும் தேடுவதில்லை?
நல்லவனை..!

இருக்கும் கெட்டவர்களில்
யார் நல்லவனென்று தேடுவது தான்
தேர்தலா?

மனம் சலித்து
பிரச்சார இம்சைகள்
ஓய்ந்து பின் ஒருவழியாக
அனுப்பி வைத்தனர்,
பதவி ஏற்ற மறுநாள்
நம்பிக்கையில்லா தீர்மானம்.!

இதுவா ஜனநாயகம்..?

சில நேரம் பெரிய மெஜாரிட்டியில்
ஜெயித்தவர்களுக்கு
வெகு சீக்கிரம்
நம்பிக்கையில்லா தீர்மானம்.

அப்படித்தான் இங்கேயும் இப்போது,
இந்தியாவில் என்ன தான் நடக்கிறது,
அழுக்குகள் நடத்தும் அழகிப்போட்டியில்
அழுது நடிப்பவர்கள் அரசியல் நடத்துகையில்
அசத்தபோவது யாரு,
வாருங்கள் இளிச்சவாயர்களே
இன்னொருமுறை ஏமாறுவோம்..?

எழுதியவர் : செல்வமணி (22-Jan-16, 9:57 am)
பார்வை : 128

மேலே