வள்ளல் குணம்தான்

வள்ளல் என்பதே அதன் தன்மை!
வாழை என்றே சொல்லிடுவோம்

மரமோ முகப்பில் வரவேற்கும்!
இலைகளோ விருந்தில் இடமாகும்
கனிகளோ நாவிற்கு சுவையாகும்
தண்டோ பருமனை குறைத்துவிடும்

நாரோ நல்மாலை தொடுத்திடும்
நமக்கு வள்ளல் அதுதானே
ஏழையானாலும் வாழை யானால்
வள்ளல் தன்மை பெற்றிடலாம்

பூவும் நமக்கு உணவாகும்
தியாகம் என்றால் வாழைதான்
வள்ளல் குணம்தான் வாழைக்கே
வாழையென வாழ்வோம் வளர்வோம்


---- கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (22-Jan-16, 7:52 pm)
பார்வை : 85

மேலே