காகித நிலாக்கள்

                         காகித நிலாக்கள்

என்னைப் போலத்தான்
படிக்காமலே புரட்டுகிறது
புத்தகத்தைக்  காற்றும்..

கருப்புத் தோட்டத்தில்(கரும்பலகையில்)
கிறுக்கியது அன்றும்
காகிதத் தொட்டியில்
இளித்தது இன்றும்
துயிலும் கண்பூக்களாய்
எனது கையெழுத்துக்கள்.

இதோ வெள்ளைமனிதன்
வேடத்தில் நான்
வலம் வரும் மந்திரி 
தேர்தலில்
ஜெயித்தால் தான் 
பெட்டிகளும் எனைத் தேடிவரும்...!

எனது ஓவியங்களை வரைந்து
முடிக்கும் தருணத்தில்
என்னை ரசித்திட எண்ணி
இடமாகத் தந்தது
தனது சேலை முடிப்பை
'அன்புடன் 
வரைகலைஞர் சிபி ' என்பதை
எதிர்பார்த்து...

காவல் காத்தது
நான் வரைந்தெழுதிய
விளம்பரப் பதாகைகள் 
ராப் பகலாய்
விழித்திருந்து
விழுந்தும் விழாமல்
காற்று மழையில்
நனைந்தசைந்து
எனது கையெழுத்தையும் சேர்த்தணைத்தபடியே...

ரசித்தது எமது ஓவியங்கள்
நீலவானில் தனியாக 
வட்டமடித்துத் திரிந்த
நிலவுக்குத் துணையாக
நூறாயிரம் நிலாக்களை  
அனுப்பி.....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Jan-16, 7:13 am)
Tanglish : kaakitha nilaakkal
பார்வை : 227

மேலே