அரும் மலர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அரும் மலர்கள் !
பாலைவனமாய் பட்டுப் போயிருந்த
இதயப் பரப்பினில் என்றோ பெய்த
சாரல் மழையில்
அரும்பாய் மலர்ந்த மலரானாள் !
மணம்வீசியே
மணங்குளிர வைப்பாளென
மகிழ்ந்திருந்த வேளையிலே
பாலைவனம் எனக்கா
சோலைவனம் வேண்டுமென
சுந்தரி சென்று விட்டாள் !
சுந்தரி சென்று விட்டாலுமே…
இதயப் பரப்பு என்றென்றுமே…..!
மணம்வீசியபடிதான் உள்ளது !
அவள் விட்டு சென்றது
அழியா நினைவு என்ற
அரும் மலரல்லவா !
---- கே. அசோகன்.