மல்லியத்தான் செருகி

மல்லியத்தான் செருகிவைச்சேன்

மாலைக் கறுக்கலிலே
மாமன் மனங்கிறங்க
மல்லியத்தான் செருகிவைச்சேன்!
மாமனைத்தான் காணலியே!
மாமனைத்தான் காணலியே!

நாக்குக்கு ருசியாத்தான்
நாந்தான் செஞ்சுவைச்சேன்
ஆக்கிவைத்த மீன்குழம்பு
ஆறித்தான் கிடக்குதடி
மாமனைத்தான் காணலியே
மாமனைத்தான் காணலியே!

மீனுருசி எச்சிலுறுதடி!
நாக்கில் வைக்க துடிக்குதடி
தேனைப் போல இருக்குமின்னு
தட்டி தட்டி சாப்பிடுவாரே!
மாமனைத்தான் காணலியே!
மாமனைத்தான் காணலியே !

கிளிகிட்ட சொல்லிவிட்டேன்
கிளியும் காணலியே !
கிலியாத்தான் இருக்குதடி!
மாமனைத்தான் காணலியே
மாமனைத்தான் காணலியே!

நிலாவைத்தான் தூதுவிட்டேன்
நிலாவையும் காணலியே!
உலாபோனவனை எவதான்
உருக்கிட்டாளோ ?
மாமனைத்தான் காணலியே
மாமனைத்தான் காணலியே!

உறக்கந்தான் வரலியே!
உண்ணவுந்தான் பிடிக்கலியே
கிறக்கமான மாமன்
சிறுக்கிகிட்ட சிக்கிட்டாரோ ?
மாமனைத்தான் காணலியே
மாமனைத்தான் காணலியே

தனியாய்தான தூங்குதற்கு
தவியாய் தவிக்கின்றேன்
மேனிதான் வாடுதடி!
கைவளைக் கழலுதடி!
மாமனைத்தான் காணலீயே!
மாமனைத்தான் காணலீயே

கண்ணோரம் நீர்த்துளிக்க
கலங்கித்தான் இருக்கையிலே
கண்ணாளன் கதவைத் தட்ட
கதவைத்தான் திறந்துட்டேன்!

நிலாவும் வந்துசேர!
மேகங்களும் சூழ்ந்திருக்க
நட்சத்திரங்கள் மின்னமின்ன
மாமன்தான் வந்தாச்சுடி!
மாமன்தான் வந்தாச்சுடி!

கட்டியிருந்த வேட்டியிலே
பொட்டலமொண்ணு இருக்கையிலே
பொட்டலமென்ன கேட்கையிலே
கண்ணைக் கொஞ்சம் மூடிக்கோ
கணக்கா ஒண்ணு தாரேன்
காதல்மாமன் சொன்னானே!
கணக்கா கண்ணைமூட
கட்டிட்டுட்டார் கயிறுஒண்ணு
மஞ்சக்கயிறு தாண்டி!
மாமன் மனங்குளிர
மல்லியப்பூவும் கசங்குதடி!
மனம்பூரா நிறைஞ்சதடி!


---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (23-Jan-16, 8:59 pm)
பார்வை : 66

மேலே