புத்தாண்டின் புதிய சிந்தனை
ஆண்டுக்காண்டு புத்தாண்டு ஆயினும்
ஆனதென்ன இந்தாண்டு நீ யோசி!
ஆரவாரமாய் அனைவரும் கொண்டாடி
ஆனந்தம் தொலைப்போம் மறுநாளே!
சிறப்பாய் இ ருந்திட இந்தாண்டு
சிரத்தையாய் செலவழித்து
சிந்தையை கசக்கி கடன்பெற்று
சிக்கலில் சிக்கிதவிப்பதே நம்வேளை!
உழைப்பின் மகத்துவம் உயர்ந்திடதானே!
உழைத்ததை உண்மைக்கு அர்பணிப்போம்
உற்றதுணையற்ற யாவர்க்கும் உணவளிப்போம்
உள்ளமும் மகிழும் எண்ணமும் ஈடேறும்!