இது காதல் ஒன்றுமில்லை

இது காதல் ஒன்றுமில்லை!!!

தூங்கும் போது மட்டும் தானே
துக்கம் தூரம் போகும்
கானல் நீர் கண்ட காடு
கனவில் ஈரமாகும்
கவலை உன்னை கலங்கடிக்கும் போது
காதில் என் கவிதை வந்து கதைகள் சொல்லும் பாரு
கதைகள் போதும் என்றால் அதை
உன் விழிகளாலே கூறு
நெடுஞ்சாலையில் நான் மரமாகுவேன்
உயிர்விடும் வேளையில் நான் உரமாகுவேன்
சத்தியமாய் நான் காதல் சொல்லவில்லை
உணர்வு சொல்ல மொழிகள் உலகில் இல்லை
என் எண்ணம் சொல்ல தமிழும் திணறும் போது
நீ அறிய வேறு வழிகள் இங்கு ஏது?!

எழுதியவர் : நிரஞ்சன் (24-Jan-16, 9:40 am)
பார்வை : 76

மேலே