ஏட்டினில் நான் எழுதிடுவேன்
ஏட்டினில் நான் எழுதிடுவேன்
உன் அழகின் பெருமை என்னவென்று பாடிடுவேன்
பூவும் பொட்டும் நிலைத்திடவே
நான் புகழ்ந்திடுவேன்
இங்கு ஆடும் மயில் உனக்கென்ன அழகு
வண்ணமயில் நின்னயே அழகென
நான் துதித்திடுவேன்
நிலையாத வாழ்வில் உனக்கென்ன தயக்கம்
அள்ளித் தந்திடும் உன் அன்பில்தான்
நான் மயங்கிடுவேன்
காற்றோடு கலந்திடும் சுழலில்என்ன பெருமை
சொற்குழலில்
ஆட்டுவிக்கும்போதுதான்
நான் மிதந்திடுவேன்
உன்னில் சேர்ந்து வாழும் நிழலுக்கென்ன வரம்
என் இதயத்திலே தொடர்ந்திடும் போதுதான்
நான் ஜீவனாகிடுவேன்
மேகத்தோடு அலைந்திடும் ஆடைக்கென்ன இனிமை
என் மேனியில் வந்தது தழுவிடும் போதுதான்
நான் உறைந்திடுவேன்
இந்த பூமிப் பூக்கள் உனக்கென்ன வசந்தம்
வண்ணப் பூக்களே வசந்தமென
நான் ரசித்திடுவேன்
பூத்திடும் பூக்களின் ரசனையில் எனக்கென்ன வாசம்
என் மேனியில் தவழ்ந்தது செல்லும்போதுதான்
நான் நுகர்ந்திடுவேன்
தென்றலோடு கலந்திடும் வார்த்தையில் என்ன புதுமை
என் செவியினில் இனித்திடும்போதுதான்
நான் மறந்திடுவேன்
கற்பனை அன்றி நான் கவிஞனாக ஆகிடவோ
உன் அழகினில் பாட்டினில் தமிழ் ஏட்டினில்
நான் எழுதிடுவேன்