மேகமே

மேகமே.......
இவ்வளவு அவசரமாக
எங்கே செல்கிறாய்......?
தலைவி சொன்ன
செய்திகளை
தலைவனிடம் கொண்டு சேர்க்கவா....?
ஒவ்வொரு முறையும்
இப்படி செல்லும் போது
உயர்ந்து நிற்கும் மலை மீது
மோதிக் கொண்டே செல்கிறாயே....?
செய்தியை உடனே சேர்க்க வேண்டும்
என்ற ஆர்வத்தாலா........
இல்லை
மலை மீது உணக்குண்டான
காதலாலா.......?