அவளின் சில வலிகள்
பாறையாகும் முன் மணலானேன்...
மண்ணாகும் முன் மழையானேன்....
மழையாகும் முன் விதையானேன்...
விதையாகும் முன் வேரானேன்....
வேராகும் முன் கிளையானேன் ...
கிளையாகும் முன் இலையானேன்...
இலையாகும் முன் மொட்டானேன்...
மொட்டாகும் முன் பூவானேன்...
பூவாகும் முன் கனியா அழுகி சாகிறேன்....
சில பிணம் தின்னி கழுகுகளால்..
இப்படிக்கு.... விலைமாது

