என் வீட்டுக் கூரையில் ஒரு பூனை

என் வீட்டுக் கூரையில் ஒரு பூனை
ஏறவும் இறங்கவுமாக
காலை முதல் மாலை முடிய
வெகு வேலையாக

அதின் மியாவ் என்ற குரல்
ஒலிக்க கூடவே சில நேரங்களில்
குழந்தையின் அழு குரலும் கேட்க
தடுமாறினேன் சற்று.


எங்கிருந்து வருகிறது அழுகை
குழந்தைக்கோ வேலை இல்லை
இரண் டு பேரைத் தவிர வேறு ஆள்
அரவம் இல்லை. என்று குழம்ப


அறிந்தேன் பின்னர் அது பூனையின்
மாறாட்ட ஒலி என்று என்ன
ஒரு குறும்பு என்று வியந்தேன்
என்னுள்ளே ஒரு சிரிப்பு.

பூனைக்கு வந்தது ஒரு விருந்து
முரடாக மீசையுடன் முறுக்காக
இரண்டும் மாலையில் ஒரு சுற்றுலா
என்று ஏகக் கொண்டாட்டம்.


இரவில் இரண்டும் என் ஒட்டுக்
கூரையில்தட தட வென்று ஓட
மிரண்டு போனேன் ஏகமாக
என் பாடு படு திண்டாட்டம் .


ஒரு நாள் மனிகூண்டை பார்க்கவும்
மறு நாள் ஆற்றுப் படுகையை காணவும்
அடுத்த நாள் செம்பனை தோட்டத்தை
பார்வையிடவும் சென்றன் மும்மரமாக .
என்னே ஒரு ஈ டுபாடு வேலையில் .

விடை பெறும் நாள் வந்த விட்டதோ
தயங்கி நின்று எட்டிப் பார்க்கறேன்
இருவரும் கட்டித் தழுவி பிரியா விடை
கொடுக்க நான் பெருமுச்சு விட்டேன்
அப்பாடா என்று வெகு நிம்மதியாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (25-Jan-16, 5:24 pm)
பார்வை : 733

மேலே