பதிலுக்காய் நீளும் காத்திருப்பு

ஊமையின் பாடலாய்
குரல் வளை தாண்டி
வெளிவருவதில்லை
உதடுகளின் சிறைக்குள்ளே
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மெளனம் எனும் பேரில்

தாழ்பாள் இல்லா செவியை
ஊனம் அடைத்ததாய்
உயிர்ப்பான எதையும்
இதுவரை கேட்டதாய்
ஞாபகம் இல்லை

கண்களும் குறுடாகிப் போயிற்று
திறந்துள்ள இமை பற்றி
எந்த பார்வையும் இல்லை
உயிர் இருக்கிறது
உணர்வுகள் மழுங்கி
நாளாயிற்று..

இதயம் மட்டும்
இன்னும் துடிக்கிறது
சுவாசம் இருக்கிறது
அதில் சுகம் என்று
ஒன்றில்லை
ஒக்சிஜன் வருவதால்
உள்ளிளுக்கிறேன்


கட்டிக் கழட்டிக்
கசங்கிப் போன புடவையும்
நிமிர்வதற்க்காய் குனிந்த
தலை குனிந்த படியே இன்னும்


விலை பேசி வலை வீசும்
உலகில் மீனாய்
நெரிக்கப் படுகிறேன்
தூண்டிலும் நானாகிறேன்

மின்குமிழ் தேடும்
சந்தையில் மின்மினியாய் ....
மின்னல் பொழிகிறது வாழ்க்கை
கருகி கசிகிறது இளமை

வாடை காற்று தீண்டையில்
புதுப்பிக்கப் படுகிறது
புலங்கள்... தனிமை
பற்றிக் கொள்கையில்
எரிகிறது பெண்மை...


வயது மட்டும் வருடா
வருடம் கழிகிறது
வருகிறேன் என்று போனவர்கள்
வருவதாய் எந்த சேதியும்
இதுவரை வந்ததில்லை...

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (25-Jan-16, 3:07 pm)
பார்வை : 177

மேலே