காதல்-1

காதல்-1
============
உன் நடையின்
வேகம் சொல்லிப்போகிறது
என் அருகாமையையும்
தொலைவையும்....

உன் விழிகளின் நகர்வு சொல்லிபோகிறது
என் குரல் ஒலிக்கும் திசையை

உன் பார்வைகள்
என் பார்வைகளுக்கு
பதில் சொல்கின்றன

உன் வெட்கங்கள்
என் வெட்கங்களுக்கு
பதில் சொல்கின்றன

உன் சங்கேதங்கள்
என் சந்தேகங்களுக்கு
பதில் சொல்கின்றன

உன் ரசனைகளே
என் வண்ணங்களை
தீர்மானிக்கின்றன

உன் நளினங்கள்...
என் இருப்பை குறிக்கின்றன.
உன் மௌனங்கள்...
என் நகர்வை குறிக்கின்றன..

உன் அருகாமையில் தோன்றும்
ஆசுவாசம் சரி என்றும் தோன்றவில்லை
தவறென்றும் தோன்றவில்லை....

நீ இல்லா நொடிகளில்
என் இருப்பு இயல்பென்றும்
தோன்றவில்லை...

எழுதியவர் : (25-Jan-16, 10:52 pm)
பார்வை : 85

மேலே