காதல்-2

நீ இல்லை எனில் நான்
இல்லை எனும் நிலை நகரப்
போவதாய் தோன்றவில்லை

காதல் எனும் கடல்நீர்
வற்றப்போவதாய்
தோன்றவில்லை..

கவிதை எனும் காகிதங்கள்
குறைய போவதாய் தோன்றவில்லை

கனவு எனும் நீளங்கள் தேய
போவதாய் தோன்றவில்லை

நீ இல்லாவிடினும்
நானும் என் காதலும்
இருக்கப்போவதாய் தோன்றுகிறது

வாழ்க்கை எனும்
பயணத்தோடு பிடிவாதமாய்
நகர போவதாய் தோன்றுகிறது

இருள் மறைத்த நிலவு நீ விலகுகையில்
நீ வேண்டாம் நிலவை நிலவாய் கேட்கிறேன்..

செய்திகளுக்கு மேல்
செய்திகளை அடுக்க
போகிறேன்

தேடல்களுக்கு மேல்
தேடல்களை குவிக்க
போகிறேன்

காலப் பதிவேட்டில்
காதல் நினைவுகளை
பின்தள்ளப் பார்க்கிறேன்

கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும்
வினாக்களுக்கும் குழப்பங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் விடை தேட
முயற்சிக்காதவனாய்...

என் காதல் தெய்வீகமானதென்று
நீருபிக்க அவசியம் அற்று
காதல் தெய்வீகமானதென்ற முடிவுடன்..

என் காதலில் என்ன பிழை
என கேட்கப்போவதில்லை
உண்மை காதலில் பிழைகளை
அழித்தேன் ....!

எழுதியவர் : (25-Jan-16, 11:11 pm)
பார்வை : 90

மேலே