பிரியமானவனே
பிரியமானவனே......
ரகசியமாய் உன் காதலை
சத்தம் போடாதே என்று
மௌனமாய் என் மனதிற்கு
கூறி விட்டு பின்
எங்கே சென்றாய்.....?
வெளியே கஷ்டங்கள்
மனதில் உன் நினைவுகள்
போராட்டமாய்.....
என் வாழ்க்கை....
எப்பொழுது வருவாய்....?
என்னை மணமுடித்து செல்ல....
நீ வந்தால் கல்யாண ஊர்வலம்....
இல்லையேல்
என் மரண ஊர்வலம்.......

