காட்சிப் பிழை -47 கசல் தொடர்

காட்சிப் பிழை-47

என்னைப் பிரிந்துமே உயிர்வாழ நினைத்தால்
எளிதில்லை தான்,அது இருந்தாலும் முடியும்!
தன்னை இழந்தவன் தான்தேற்றி வாழ்ந்தால்
தனக்கது எளிதில்லை இருந்தாலும் முடியும்!

காலங்கள் தருகின்ற காதற்பூ வாளி
கைகளில் எடுப்பவர் தான்,குற்ற வாளி!
பாலங்கள் போடுவாய் கடலாகும் நாழி!
பதறாதே முடியும்! எளிதல்ல வா நீ!
(என்னைப் பிரிந்துமே)
விருப்பத்தைக் கண்டு தடைபோடு வார்கள்!
வேண்டாத சொல்லி மடைமாற்று வார்கள்!
வெறுப்போர்கள் முன்னும் பொறுப்போடு வாழ
மறக்காதே! முடியும்! எளிதல்ல வா!நீ!
(என்னைப் பிரிந்துமே)
எண்ணுவ தெல்லாம் எளிதாய்க் கிடைத்தால்
இயற்கையும் உன்னை ஏய்த்திடப் போகும்!
கண்மூடி அழுகின்ற கலக்கத்தை விடுவாய்!
கடினம்தான் ஆனாலும் கைகூடும் வா நீ!
(என்னைப் பிரிந்துமே)

வாய்க்காலில் நீரும் வற்றாதோ சொல்லு!
வயல்மாறி மனையாக வாய்க்கேது நெல்லு?
தாய்க்காலைப் பற்றாது பாலில்லை நம்பு!
தளராதே முடியும்! எளிதில்லை வா நீ!
(என்னைப் பிரிந்துமே)

உனக்கும் எனக்கும்தான் உள்ளதிப் பிரிவு!
உறுதி,நம் காதலும் அதற்கிலை சரிவு!
மெனக்கிடு வோர்மேல் வைத்திடு பரிவு!
மீளுவோம்! முடியும்! எளிதில்லை முறிவு!
(என்னைப் பிரிந்துமே)

================== ========================
(2)

என்றும் எனக்குள் வருத்தும் உன்பிரிவு!
இருந்தும் மனதினுள் பொருந்துமோர் நிறைவு!

அழகிய செடியினில் ஒழுகிடும் தேனுடன்
முழுவதும் மணத்துடன் மலர்ந்தேன்!
பழகிட வருமுன் வழியினைப் பார்த்து
வெளிவரும் மகிழ்ச்சியில் அசைந்தேன்
(என்றும் எனக்குள்)

ஜோடிப் பறவைகள் கூடி மகிழ்ந்திடும்!
சுகத்தினில் என்மனம் நெகிழ்ந்திடும்!
ஆடிக் களித்தேன் ஆகா யத்துடன்
ஊடித் திளைத்தேன் உவந்தேன்!
(என்றும் எனக்குள்)

மறந்துமே மதுவை மண்ணினில் சிந்தேன்!
மதுகரம் உனக்கது தந்தேன்!
பறந்துமே போயினை பருகியே மறந்தனை
பிறந்தயென் பயன்முடித் துருகுவேன்!
(என்றும் எனக்குள்)
============ ================== எசேக்கியல் காளியப்பன்..

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (27-Jan-16, 10:04 am)
பார்வை : 323

மேலே