அசலூரு ஆனாலும்

துபாய் போன நண்பன் நம்ம தருமரு
துடிக்கும் நெஞ்சு முழுசும் அன்பு ஓவரு!
அட்டகாசமா கவித எழுதும் அன்பரு ..
ஒட்டுமொத்தமா நட்புல சேந்தாரு!


தம்பி முல்லாவோட பூமியில வேலையா
அங்க குல்லா போடும் மனுஷர நீ பாத்தியா
அங்கியும் இங்கயும் ஒரே மாரி தானப்பா..
எங்க நீ போனாலும் நரிங்க ரொம்ப இருக்கப்பா..!


ஒந்தலையிலதான் நெய்ய வெச்சு புடிப்பாங்க
கண்ண மறைக்கும்பேச்சு பேசி ஒன்ன கவுப்பாங்க
வெயிலு எரிக்கும் நாட்டுல நீ இப்ப வாழுற
சோல காத்து வீசும் எப்பவும் ஒன் வாழ்வுல!

எழுதியவர் : கருணா (27-Jan-16, 10:56 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 127

மேலே