நட்பு
இடர்கள் ஆங்காங்கே களையும் இனிய நண்பா
உறையும் பனியில் உள்ள நீர்போல்
உன் அறிவுரையும்
விரும்பா திருந்தாலும் சாயும் உன் செவியும்
என்சொல்வது நம் நட்பின் உரையென்பது
சொல்லா வண்ணம் சொல்லில் திண்ணம்.
ஆசைகள் ஆயிரம் ஆடிடும் நம் மனங்கள்
சிறுஆசைகள் நிறைவேற ஆனந்தம் காணும்
வெல்லா சிலதில் வேதனைக் கொள்ளும்
ஆசைகள் சிலவும் அறுபடும் நட்புக்காக
சொல்லவேண்டும் நம் நட்பின் தன்மை
பற்றா கணம் பற்றும் குணம்.
நட்புகளுடன் கூடும் நாட்கள்
வெயில் பட்டு பனிபோல
உருகும் பல மணித்துளிகள்
மனதின் எந்த நிலையும் மாற்றும்
நட்பின் கணம் என்றும் உரைப்பேன்
அடையா கரணம் அடையும் பூர்ணம்
- செல்வா