கண்ணைக் கொடுத்தார்

ஐயா மொழிந்தாராம் – கனிபோல்
அன்பைப் பிழிந்தாராம் – வாழ்வைக்
கொய்யும் ஆரியர் கொட்டம் அடங்கிட
அறிவைப் புகன்றாராம் – நெஞ்சால்
பரிவாய் நவின்றாராம் !

போலி சாமிகளை – புரியும்
புன்மைக் கேடுகளை – பயிரின்
வெளிப் பிடுங்கிநல் பயிரை யழித்திட
வேதம் உரைத்தாராம் – புதிய
கீதம் இசைத்தாராம் !

சாதிச் சடங்குகளாம் – நாற்ற
சாக்கடை கிடங்க்குகளாம் – தமிழர்
நீதிக் குலைத்திட செல்வஞ் சுரண்டிடும்
நீசரைக் கடிந்தாராம் – தெய்வத்
தாசரை ஓடித்தாராம் !

அண்டிப் புகுந்தானே – இங்கே
அலைந்து திரிந்தானே – பார்ப்பான்
பண்டைத் தமிழரினம் பாழ்பட்டுப் போய்விட
பாதை அமைத்தானே – புராணப்
போதைக் கொடுத்தானே !

தந்தைப் பெரியாராம் – மின்னும்
தங்க நிரத்தாராம் – பார்ப்பான்
சிந்தை மகிழ்ந்திட தந்திட்ட வெற்றுரை
தன்னை அடித்தாராம் – அறிவுக்
கண்ணைக் கொடுத்தாராம் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jan-16, 8:04 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 80

மேலே