ஒருதலை காதல்

மலர் மலர்வது எங்கோ
அதை கண்டு
கண் குளிர்வது இங்கே தான் !
சிட்டுகள் சிறகுகளோடு
வானில் உலா வருவது
போல் இங்கே
சிறு இதயம் ஒன்று
சிறகில்லாமல்
விண்ணிக்கும் மண்ணுக்கும்
காதல் நடைபயணம் போடுது !
அவள் வாய் பேசவில்லை
என்றாலும் அவள் வாய்ஸ்
இவன் காதுகளில் கேட்டகாமல் இருப்பதில்லை !
அவளிடம் பேச வாய்ப்பில்லாமல்
போனாலும் மனதோடு
அவளின் செல்ல குரல் கேட்கும் !
எழுதிய பார்த்ததும்
கண்ணாடி முன் பேசி பார்த்ததும்
தேக்கி வைத்ததும்
கலவரமில்லாமல்
பிரிவில்லாமல் நகரும் !
கனவோடும் நினைவோடும்
காதல் கவிதை வந்து
வாழ்த்தும் ஒருதலை காதலை
நூறு ஜென்மம் வாழ !