தோன்றாதோ இம் மாந்தருக்கு

மகன் என்றால் ஒரு சிரிப்பு
மகன் பிறந்து விட்டான்
என்றால் ஒரு களிப்பு
குல ம் தழைக்க வந்த
அரசே என்ற ஒரு பூரிப்பு .

மகள் என்றால் ஒரு வெறுப்பு
மகள் பிறந்து விட்டாள்
என்றால் ஒரு சலிப்பு
அகண்ட சொத்துக்கு
ஒரு வினை என்ற கடுப்பு .

என்று மாறுமோ இந்த
வேறுபாடு பெண் என்ன
ஆண் என்ன இருவரும்
சமமே என்ற எண்ணம்
தோன்றாதோ இம்
மாந்தருக்கு.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Jan-16, 11:07 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1053

சிறந்த கவிதைகள்

மேலே