கைத்தறிக்குக் கைகொடுப்போம்
நெசவாளன் வாழ்க்கை நிதமொரு போர்க்களம்
அடகுக் கடையில்தான் அவன்சமையல் பாத்திரம்!
எந்திரத் துணிகளே
ஆதிக்கம் செய்வதால்
இல்லாமல் போனது அவனது ஜீவனம்!
ஆடைகள் தந்து மானத்தைக் காத்தவன்
ஊடும் பாவுமாய் உயர்வாழ்வு வாழ்ந்தவன்
கஞ்சித் தொட்டிக்குக்
காத்துக் கிடக்கிறான்-
வறுமை கொல்கின்ற வசதி இல்லாதவன்!
பண்டிகையில் கைத்தறித் துணிகளை வாங்குவோம்
பிறந்தநாள் பரிசாக அதைத்தந்து வாழ்த்துவோம்
கண்ணீரில் கிடக்கும்
நெசவாளர் வாழ்க்கையை
கைதூக்கி விடவே நம்பங்கை ஆற்றுவோம்!:
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
