அழகான பெண்ணும் ஆராதிக்கும் கண்ணும்
தான் அழகு என
அவள் நினைப்பதும்,
அதனால்
தன்னை மதிப்பாளோ என
இவன் தடுமாறுவதும்
மனக்கண்ணின்
தப்பான கணக்கோ.?
சுமாரான பெண் என்றாலே
ஆணின் கண்
கழுகாய் வட்டமிடும்;
சூப்பரான பெண் என்றாலோ
வடை சுட்டுச்செல்லும்
காக்கை போல வட்டமிடும்.
இது தானே இன்றைய சூழல்..?