குறையொன்றும் இல்லை

பார்வையற்றர்கள்-
கவிஞனாகின்றனர்
செவிகேளாதார்-
பாடகராகின்றனர்
கையற்றவர்கள்-
ஓவியராகின்றனர்
காலற்றவர்கள்-
நடனமாடுகின்றனர்
பேச்சை இழந்தவர்கள்-
இசைமீட்டுகின்றனர்
இப்படி
ஏதாவது ஒரு துறையில்
சாதிக்கின்றனர்
மாற்றுத் திறன் படைத்தவர்கள்
காரணம்
- உடலிலே குறை குறையல்லவே..!
அவை வெற்றியின் அடையாளம்...
நம்பிக்கைச் சின்னம்...
சாதிக்க தூண்டும் தூண்டுகோல்....
தன்னம்பிக்கை ஊற்று...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Jan-16, 11:42 pm)
Tanglish : kurayonrum illai
பார்வை : 150

மேலே