அழகிய நிலவொளியில்

இலேசான மயிலிறகு வருடும் வண்ணம்,
இதமான காற்று கன்னியினை வருட,
இருவிழிகள், கனவின் நாயகனை தேடியது,

தேடிய நாயகன் அருகினில் வந்தமர,
தேய்ந்த நிலவும் வெட்கத்தில் அமிழ்ந்தது,

கண்களது நிமிராது எண்ணங்கள் பல நினைவிலோட,
கரம்கொண்டு நிமிர்த்தி,
கண்களை காண செய்தார்,
கண்ட நொடியே சிவந்தது கன்னம்,

"மான் அழகே" என்று சிரித்தபடி அவர் சொல்ல,
மௌனவெட்கத்தில் மருளியது நெஞ்சம்,
மடிசாயத்தபடி மயக்கம் தந்தார்,
மணவாளன் மடியது மெத்தையென,
மலர்கொடிகள் மெல்லிசை எழுப்ப,

நிலவோடு கவிப்பாடி கொஞ்சம்,
நினைவோடு நின்றாடும் நிலவு,
நிறைத்தது கனவோடு என்னை !!!

எழுதியவர் : ச.அருள் (31-Jan-16, 9:39 am)
பார்வை : 340

மேலே