நட்பு என்றால் என்ன
பொய்யாத ஒருவனின் துணை, நட்பு.
பண்பு வாய்ந்த பாசம்காட்டுவது, நட்பு.
அறம், பொருள், இன்பம் தழைத்து,
அன்பைத் தேடி வருவது நட்பு.
கல்வி, புகழ், காதல் ஆகியனவற்றைக்
கருத்திற்குக் கொண்டு வருவது நட்பு.
திறமை, திடம் வாய்ந்த நெஞ்சிற்குத்,
துணையாய் நிற்கும் ஆயுதம், நட்பு.
பண்பு, பாசம், பரவசம் ஆகியன
பொங்கி எழக்கூடிய பாகம், நட்பு.